Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல்

தெஹ்ரான்: ஜூலை 29-
வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து வரும் சூழலில், அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், இந்த திடீர் தாக்குதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
அமெரிக்கா ஈரான் இடையே நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது. வளைகுடாவில் நிலவும் இந்த அமைதியின்மை சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், நிலைமையை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகிறது. இருப்பினும், போர் முழுமையாக முடிவுக்கு வர இப்போதைக்கு சாத்தியம் இருப்பது போல தெரியவில்லை.
இந்தச் சூழலில் தான் நேற்றிரவு திடீரென அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறுகையில், “இந்த தாக்குதல் திடீர் தாக்குதலாக நடத்தப்பட்டது. இருப்பினும், ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன. உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை. அமெரிக்க படைகள் தொடர்ந்து ஹை அலர்ட் மோடில் தான் இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ தளம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்தே ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்கா வெளியிட மறுத்துவிட்டது.