
ஜம்மு-காஷ்மீர்: செப். 17-
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ‘ஒயிட் நைட் கார்ப்ஸ்’ (படைப்பிரிவினர், காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் படையினர் இணைந்து நேற்றிரவு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்புக்கு மத்தியில், இரு சூழ்ந்த பகுதிகளுக்கு இடையே பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இந்த நடவடிக்கையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகம்மது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













