Home மாவட்டங்கள் சென்னை ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி

சென்னை: அக். 17–-
தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் ஆர்​எஸ்​எஸ் சார்பில் அக்​.25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதி வழங்கி உயர் நீதி​மன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.
ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் நிறுவன தினத்தை முன்​னிட்டு தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் அக்​.18, அக்​.25, நவ.1 ஆகிய நாட்​களில் ஏதேனும் ஒரு​நாளில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதிக்க கோரி ஆர்​எஸ்எஸ் அமைப்​பின் மாநிலச் செய​லா​ளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, ‘அக்​.25, நவ.1 ஆகிய தேதி​களில் அணிவகுப்பு நடத்த அனு​மதி வழங்​கப்​படும்’ என தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றம் வகுத்த விதி​முறை​கள் கடைபிடிக்​கப்​படும் என ஆர்​எஸ்​எஸ் தரப்​பிலும் உத்​தர​வாதம் அளிக்​கப்​பட்​டது.
அதை பதிவு செய்​து​கொண்ட நீதிப​தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒவ்​வொரு ஆண்​டும் ஆர்​எஸ்எஸ் சார்​பில் அணிவகுப்பு ஊர்​வலம் நடத்த அனு​மதி கோரி நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய சூழல் உள்​ளது. இனி​யும் அது​போன்ற சூழல் ஏற்படக் கூ​டாது. ஆர்​எஸ்​எஸ் அணிவகுப்பு ஊர்​வலம் மற்​றும் அதைத் தொடர்ந்து நடத்​தப்​படும் பொதுக்​கூட்​டங்​களுக்கு போலீ​ஸார் அக்​.19-க்​குள் அனு​மதி வழங்க வேண்​டும்.