Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியா – கனடா வர்த்தக ஒப்பந்தம்: 5வது சுற்று பேச்சு இன்று தொடக்கம்

இந்தியா – கனடா வர்த்தக ஒப்பந்தம்: 5வது சுற்று பேச்சு இன்று தொடக்கம்

புதுடில்லி, அக். 5- இந்தியா – கனடா இடையிலான விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஐந்தாவது சுற்று பேச்சு, கனடாவின் ஒட்டாவாவில் இன்று (அக்., 5) தொடங்குகிறது. இது குறித்து வர்த்தக துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: இரு நாடுகளின் தலைமை அதிகாரிகள் பங்கேற்கும் இந்த பேச்சு, ஐந்து நாட்கள் நடைபெற்று அக்., 9ல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது சுற்று பேச்சு செப்., 18ல் டில்லியில் நிறைவடைந்தது.
இந்தாண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்த பேச்சை முடிக்க, இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. இதனால், பேச்சுவார்த்தை தற்போது வேகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்படவோ அல்லது நீக்கப்படவோ வாய்ப்பு உள்ளது. திறன் வாய்ந்த பணியாளர்கள் இரு நாடுகளிலும் சென்று பணியாற்றுவதற்கான விதிகளை எளிதாக்குவது மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது உள்ளிட்ட அம்சங்களும் இதில் இடம்பெறும். இரு நாடுகளும் 2015ல் இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சை முதன்முதலில் தொடங்கின