
வேலூர்: நவ. 24-
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நள்ளிரவில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக காட்பாடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். விவசாயம் செய்து வரும் இவருக்கு தினகரன், மயில் அழகன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் தினகரனின் வலது கை, விவசாயப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஏற்கெனவே துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று இரவு தினகரன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காட்பாடி காவல்துறையினர், தினகரனின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.













