
லக்னோ: மே 14-
உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை மற்றும் இடி மின்னல் தாக்கி மாநில முழுவதும் 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனமழை மற்றும் புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தபணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்திய அவர், வருவாய் மற்றும் வேளாண்மைத் துறைகள், காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து சேதங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இடி மின்னல் கனமழை காரணமாக உத்தரப்பிரதேச மாநிலமே புரட்டி போடப்பட்டுள்ளது பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது மீட்டு பணிகளை மாநில அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து முழு வீச்சில் தொடங்கி நடத்தி வருகிறது.

















