Home தலைப்பு செய்தி கேரள முதல்வர் வி.டி.சதீசன்

கேரள முதல்வர் வி.டி.சதீசன்

திருவனந்தபுரம்: மே 14 –
கேரள மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய அரசு அமையவில்லை. யார் முதல்வர் என்பதில் கடந்த 11 நாட்களாகக் குழப்பம் நீடித்து வந்தது. இந்தச் சூழலில் தான் கேரள முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன், மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 4ம் தேதி தமிழகத்தோடு கேரளா உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் தமிழ்நாட்டில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவான நிலையில், மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பாஜக வென்றது. புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வென்றது.
இந்த 4 மாநிலங்களிலும் புதிய அரசு அமைந்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் வென்ற கேரளாவில் மட்டும் புதிய அரசு அமையவில்லை.
கேரளாவில்
தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வென்ற போதிலும், அங்கு யார் முதல்வர் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இதில் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் முதல்வர் ரேஸில் இருந்தனர். இந்தச் சூழலில் தான் 11 நாட்களுக்குப் பிறகு இந்தக் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. கேரள முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி. சதீசன், மக்களிடையே செல்வாக்கு மிக்க தலைவராகவும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.