Home செய்திகள் தேசிய செய்திகள் கங்கனா சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

கங்கனா சர்ச்சை பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கண்டனம்

புதுடெல்லி, ஜூலை 29- நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாஜக எம்.பி.கங்கனா ரணாவத் தனது சமூக ஊடகத்தில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பாய் ஜக்தாப் கூறும்போது, “போராட்டத்தின்போது பெண் குழந்தைகளும் மாணவர்களும் தாக்கப்பட்டனர்; கொடுமைப்படுத்தப்பட்டனர். மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து கங்கனாவுக்கு சிறு மனவருத்தம் கூட இல்லாதது வியப்பளிக்கிறது” என்றார். ஏஐஎம்ஐஎம் கட்சி செய்தி தொடர்பாளர் வாரிஸ் பதான் கூறும்போது, “கங்கனாவின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வின் முழு விளக்கமாவது அவருக்குத் தெரியுமா என்று கேளுங்கள்; நிச்சயமாகத் தெரியாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.