Home செய்திகள் தேசிய செய்திகள் ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பஸ் கவிழ்ந்து 39 பக்தர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை பஸ் கவிழ்ந்து 39 பக்தர்கள் காயம்

ஸ்ரீநகர், ஜூலை 29- ஜம்​மு-​ காஷ்மீரில் அமர்​நாத் யாத்​திரையை முடித்துவிட்டுத் திரும்​பிய பக்​தர்​கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்​ளான​தில் 39 பேர் காயமடைந்​தனர். கந்​தர்​பால் மாவட்​டம் கங்​கன் பகு​தி​யில் உள்ள ஹரி​கான்​வான் என்ற இடத்​தில், நேற்று காலை அமர்​நாத் யாத்​ரீகர்​களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று வளை​வில் திரும்​பும்​போது, ஓட்டுநரின் கட்​டுப்​பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்துக்கொண்டு பள்​ளத்​தில் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. இதில் பேருந்​தில் பயணித்த 39 பக்​தர்​கள் காயமடைந்து மருத்துவமனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். அமர்​நாத் குகைக் கோயி​லில் பாபா பர்ஃ​பானியை தரிசனம் செய்து​விட்​டுத் திரும்​பிய பக்​தர்​கள் இந்த விபத்​தில் சிக்​கினர். விபத்து நடந்த உடனே அப்​பகுதி மக்​களும் பாது​காப்​புப் படையினரும் இணைந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். இது குறித்து காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகை​யில், “கந்​தர்​பால் சாலை விபத்​தில் காயமடைந்த அமர்நாத் யாத்​ரீகர்​களுக்​குத் தேவை​யான அனைத்து மருத்​துவ உதவி​களை​யும், சிறந்த சிகிச்​சையை​யும் தாமதமின்றி வழங்​கிட அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். காயமடைந்த பக்​தர்​கள்​ விரை​வில்​ குணமடைய சிவபெரு​மானைப்​ பி​ரார்​த்​திக்​கிறேன்​” என்​றார்​.