Home செய்திகள் உலக செய்திகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய 20 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்திய 20 பேர் சுட்டுக் கொலை

முசாஃபராபாத்: ஜூலை 29-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) நடை​பெற்று வரும் தேர்​தலைப் புறக்​கணிக்​கக் கோரி நடை​பெற்ற போராட்​டத்​தில் பாகிஸ்​தான் ராணுவம் 20 பேரை சுட்​டுக் கொன்றதால் பதற்​றம் நிலவுகிறது.
பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் 53 தொகு​தி​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டு, 3 கட்​டங்​களாக ஆகஸ்ட் 10-ம் தேதி வரை வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. ஜூலை 27 அன்று முதற்​கட்ட வாக்​குப்​ப​திவு தொடங்​கிய நிலை​யில், தேர்​தலை புறக்​கணிக்​கக் கோரி ‘ஜா​யிண்ட் அவாமி ஆக்​சன் கமிட்​டி’ (ஜேஏஏசி) உள்​ளிட்ட அமைப்​பு​கள் தீவிரப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றன.இந்நிலை​யில், ராவலாகோட் பகு​தி​யில் உள்ள டிரேக் எய்த் உள்ளிட்ட இடங்​களில் நேற்று முன்​தினம் திரண்ட போராட்டக்காரர்​கள் மீது பாகிஸ்​தான் ராணுவம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யது. இதில், ஜேஏஏசி​யின் முக்​கிய நிர்​வாகி​யான உமர் நசீர் காஷ்மீரி​யின் சகோ​தரர் உஸ்​மான் நசீர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வெளி​யான வீடியோக்களில், அமை​தி​யான முறை​யில் போராட்​டம் நடத்​தும் பொது​மக்​கள் மீது பாகிஸ்​தான் பாது​காப்​புப் படை​யினர் நேரடியாக துப்​பாக்​கிச் சூடு நடத்​து​வதும், சுடப்​பட்​ட​வர்​களின் சடலங்​கள் வீதி​களில் சிதறிக் கிடக்​கின்ற கொடூரக் காட்​சிகளும் பதிவாகியுள்ளன. கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் நடை​பெற்று வரும் தொடர் போராட்​டங்​களில், இது​வரை பாகிஸ்​தான் படைகளின் அடக்​கு​முறை​யால் 80-க்​கும் மேற்​பட்டோர் உயிரிழந்துள்​ளனர்.இப்​பகு​தி​யைச் சேர்ந்த சமூக செயற்​பாட்​டாளர் அகீல் பாய் கூறுகை​யில், “இங்கு நிலைமை மிக​வும் மோசமடைந்​துள்​ளது. ராவலாகோட் பகுதி முழு​வதும் பிணங்​களாலும் காயமடைந்தவர்களாலும் நிறைந்​துள்​ளது. சர்​வ​தேச ஊடகங்​கள் எங்​களுக்கு ஆதர​வளிக்க வேண்​டும்” என்று கண்​ணீர் மல்க தெரிவித்​தார்.