Home மாவட்டங்கள் பெங்களூர் குடிக்கத் தண்ணீர் தர மறுப்பு: லாரி கிளீனர் குத்திப் கொலை – குற்றவாளி கைது

குடிக்கத் தண்ணீர் தர மறுப்பு: லாரி கிளீனர் குத்திப் கொலை – குற்றவாளி கைது

பெங்களூரு, ஆக. 19- குடிக்கத் தண்ணீர் தர மறுத்த ஆத்திரத்தில், லாரி கிளீனரை கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த பர்கத் என்பவரே கொலை செய்யப்பட்ட துரதிர்ஷ்டசாலி ஆவார்.
இச்சம்பவம் தொடர்பாக மதுகிரியைச் சேர்ந்த சீனப்பா என்பவரை ஆர்.எம்.சி. யார்டு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பர்கத் மற்றும் சீனப்பா ஆகிய இருவரும் லாரி கிளீனர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் உணவருந்திய பிறகு, பர்கத்திடம் சீனப்பா குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார்.
அதற்கு பர்கத் தண்ணீர் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சீனப்பா மறைத்து வைத்திருந்த கத்தியால் பர்கத்தை கொடூரமாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இரத்த வெள்ளத்தில் பர்கத் சடலமாகக் கிடப்பதைக் கண்ட சக லாரி டிரைவர்கள் இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.எம்.சி. யார்டு போலீசார் வழக்கைப் பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளி சீனப்பாவைத் தீவிரமாகத் தேடிப் பிடித்து கைது செய்தனர்.