Home செய்திகள் தேசிய செய்திகள் கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்

கேரளாவில் இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்த இரட்டையர்

கோட்டயம், ஆக, 3- கேரள மாநிலம் கோட்​ட​யம் மாவட்​டம், சங்​களச்​சேரி பெருநகரத் திருச்​சபை​யில் நடை​பெற்ற ஒரு திரு​மணம் அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​யது. ஏனெனில், இத்​திரு​மணத்​தில் பங்​கேற்ற மணமக்​கள், திரு​மணத்தை நடத்தி வைத்த பாதிரி​யார்​கள் என இரட்​டையர்​களால் நிரம்பி வழிந்​தது. வணி​கக் கப்​பற்​படை​யில் பணி​யாற்​றும் இரட்​டைச் சகோ​தரர்​களான அகில் கே.​தாமஸ் மற்​றும் நிகில் கே.​தாமஸ், தகவல் தொழில்​நுட்​பத் துறை​யில் பணிபுரி​யும் இரட்​டைச் சகோ​தரி​களான மேகி மேரி மற்​றும் மரியா மேரி ஆகியோரைத் திரு​மணம் செய்து கொண்​டனர்.இத்​திரு​மணத்​தின் மற்​றொரு சிறப்​பம்​சம் என்​னவென்​றால், காஞ்​சிரப்​பள்ளி மறை​மாவட்​டத்​தைச் சேர்ந்த இரட்டை பாதிரி​யார்​களான தந்தை ஆண்டோ பெஜும்ம்​கட்​டில் மற்​றும் தந்தை அஜோ பெஜும்ம்​கட்​டில் ஆகியோர் இத்​திரு​மணத்தை நடத்தி வைத்​தனர். மேலும், பாலா நகரைச் சேர்ந்த இரட்​டைச் சகோ​தரர்​களான ஜெரோன் ஜேம்ஸ் மற்​றும் ஜோஹன் ஜேம்ஸ் ஆகியோர் பீடத்​தில் அவர்​களுக்கு உதவி​யாக நின்​றனர். ஒவ்​வொரு முக்​கிய​மான செயலிலும் இரட்​டையர்​கள் இருக்க வேண்​டும் என்ற யோசனை தற்​செய​லாக நடந்​ததல்ல. இரட்​டையர்​கள் சூழத் திரு​மணம் செய்ய வேண்​டும் என்​பது மணமகள்​களின் நீண்ட நாள் ஆசை. இதை நிறைவேற்ற இரட்டை மணமகன்​கள் தேடினர். பின்​னர், கோத்​தகநல்​லூர் தேவால​யத்​தின் உதவி​யுடன் இரட்​டை பாதிரி​யார்​களைக் கண்​டறிந்​ததன் மூலம் சாத்​தி​ய​மானது.