Home செய்திகள் தேசிய செய்திகள் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

திருவனந்தபுரம்: மே 27-
கேரளா முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகிறார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துத்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள். கேரளா சட்டமன்ற தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே ரெய்டு நடந்திருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சிபிஎம் ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் வெற்றி பெற்றார். 10 வருடங்களாக முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன் ஆட்சியை இழந்த வருத்தத்தில் உள்ளார். அவருக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் கேரளாவில் 10 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். அதில் பினராயி விஜயன் வீடு தான் ஹாட் ஸ்பாட். பினராயி விஜயனின் மகள் வீணா எக்ஸாலாஜிக் சொல்யூசன் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்திற்கும், கொச்சின் மினரல்ஸ் ருடைல் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வீணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2017 – 2020 காலகட்டத்தில் கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்திடம் இருந்து வீணாவின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி பரிமாற்றமாகியுள்ளது. இதேபோல 2023 ஆம் ஆண்டில் ரூ.2.70 கோடி பரிமாற்றமாகியுள்ளது. இந்த வழக்கில் வீணா சிக்கியது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமலாக்கத்துறையின் வழக்கை ரத்து செய்ய கோரி, கொச்சின் மினரல்ஸ் நிறுவனம் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை கேரளா நீதிமன்றம் தள்ளுபடி செய்தனர். இது நடந்த சில நாட்களிலேயே ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. பினராயி விஜயன், அவர் மகள் வீணா, வீணாவின் கணவர், முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸ், கொச்சின் மினரல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கேரளா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.