Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு

மேற்கு வங்கத்தில் ரூ.5-க்கு மீன் உணவு

கொல்கத்தா: மே 27-
மேற்கு வங்க அரசு நடத்​தும் கேன்​டீன்​களில் ரூ.5-க்கு மீன் உணவு வழங்​கப்​பட​வுள்​ளது.
மேற்கு வங்​கத்​தில் நடை​பெற்ற தேர்​தலின் முடிவு​கள் கடந்த 4-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று சுவேந்து அதி​காரி தலை​மை​யில் ஆட்சி அமைந்​துள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கத்​தில் மச்​-​பாத் என்ற பெயரில் வாரத்துக்கு 2 நாட்கள் ரூ.5-க்கு மீன் உணவு வகைகளை அரசு நடத்​தும் கேன்​டீன்​களில் வழங்க அரசு முடிவு செய்​துள்​ளது. தற்​போது இந்த கேன்​டீன்​களில் முட்டை சாதம், அரிசி உணவு​கள் வழங்​கப்​படுகின்​றன.
இந்​நிலை​யில் மீன் உணவைச் சேர்க்​கும் இந்த திட்​ட​மானது, மேற்கு வங்க பொது உணவு விநி​யோகக் கண்​ணோட்​டத்​தில் ஒரு குறிப்​பிடத்​தக்க கலாச்​சார மற்​றும் அரசி​யல் மாற்​றத்​தைக் குறிப்​ப​தாக அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர். மேற்கு வங்க மக்​களுக்​கு, மீன் என்​பது வெறும் உணவு மட்​டுமல்ல. அது அவர்​களின் அடை​யாளம், கலாச்​சா​ரம் மற்​றும் அன்​றாட வாழ்க்​கை​யுடன் ஆழமாகப் பிணைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, மீன் மற்​றும் அரிசி உணவை மிகக் குறைந்த மானிய விலை​யில் வழங்​கும் அரசாங்​கத்​தின் இந்த நடவடிக்​கை, ஒரு நலத்​திட்​ட​மாக​வும், வங்க மக்​களின் மனநிலை​யைச் சென்​றடை​யும் ஒரு குறி​யீட்டு முயற்​சி​யாக​வும் பார்க்​கப்​படு​கிறது. இந்​தத் திட்​டம் குறித்து இறுதி முடிவு எடுக்​கப்​பட்டு விட்​ட​தாக​வும், விரை​வில் இது மேற்கு வங்​கம் முழு​வதும் அமலுக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மாநிலம் முழு​வதும் அரசு நடத்​தும் கேன்​டீன்​களில் தினக் கூலிகள், தொழிலா​ளர்​கள், போக்​கு​வரத்து ஊழியர்​கள், குறைந்த வரு​வாய் கொண்ட குடும்​பத்​தார், நகரில் வசிக்​கும் ஏழை மக்​கள் இந்த உணவு​களை சாப்​பிட்டு வரு​கின்​றனர். தற்​போது, இந்த கேன்​டீன்​களில் பாரம்​பரிய​மான “மச்​-​பாத்” உணவை வெறும் 5 ரூபாய்க்​குப் பெறு​வது என்​பது, மானிய விலை​யில் கிடைக்​கும் உணவாக மட்​டுமல்​லாமல், வங்கஅடை​யாளத்​துடன் நெருக்​க​மாகப் பிணைக்​கப்​பட்ட ஒரு வாழ்க்கை முறையைப் பாது​காப்​ப​தாக​வும் பார்க்​கப்​படு​வ​தாக மேற்கு வங்க அரசி​யல்​ நிபுணர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.