Home மாவட்டங்கள் சென்னை கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? – மறுப்பு தெரிவித்து விளக்கம்

கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்கில் நடிகைக்கு தொடர்பா? – மறுப்பு தெரிவித்து விளக்கம்

சென்னை, நவ. 1- முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் வழக்​கில் சின்​னத்​திரை நடிகைக்கு தொடர்பு இருப்ப​தாக சமூக வலை​தளங்​களில் தகவல்​கள் பர​விய நிலையில், இந்த விவகாரத்​துக்​கும் தனக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்லை என நடிகை ஜனனி அசோக்​குமார் விளக்​கமளித்​துள்​ளார்.

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நக​ராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை அமைச்​சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அப்​போது, அத்​துறை​யில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறி​யாளர்​கள் உள்​ளிட்ட அதிகாரி​கள் நியமனத்​தில் ரூ.634 கோடி லஞ்​சம் பெறப்​பட்​ட​தாகப் புகார் எழுந்​தது. இது​தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புப் போலீ​ஸார் வழக்குப் ​பதிவு செய்து கே.என்.நேரு, அவரது சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்ணன் உள்​ளிட்​டோரின் வீடுகள் மற்​றும் அலுவலகங்களில் சோதனை நடத்​தினர். இந்​தச் சோதனை​யில் 170 ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாகத் தெரி​விக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் சின்​னத்​திரை நடிகைகள் இருவருக்குத் தொடர்பு இருப்​ப​தாக எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை​தளங்​களில் தகவல்​கள் பர​வின. குறிப்​பாக, நடிகை ஜனனி அசோக்​குமாரின் பெயர் இந்த விவகாரத்​துடன் தொடர்​புபடுத்​திப் பேசப்​பட்​டது. இத​னால், ஜனனி அசோக்​குமார் குறித்த விவாதம் சமூக வலை​தளங்​களில் அதி​கரித்​தது. இருப்பினும், இந்​தக் குற்​றச்​சாட்​டுகள் தொடர்​பாக நடிகைகளுக்கும் வழக்​கில் தொடர்பு இருப்​ப​தாக அதிகாரப்பூர்வமாக எந்​தத் தகவலும் உறுதிப்​படுத்​தப்​பட​வில்லை.

இதற்​கிடையே, தனது பெயர் இந்த விவகாரத்​துடன் தொடர்​பு படுத்​தப்​படுவதற்கு மறுப்​புத் தெரி​வித்து நடிகை ஜனனி அசோக்குமார் அறிக்கை ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த இரண்டு நாட்​களாக சமூக வலைதளங்களில் என்​னைப் பற்​றிப் பல்​வேறு தவறான தகவல்களும் குற்​றச்​சாட்​டுகளும் பரப்​பப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக, ரூ.634 கோடி மோசடி தொடர்​பான விவகாரத்​துடன் எனது பெயர் இணைத்​துப் பேசப்​படு​கிறது. இந்த விவகாரத்​தில் எனக்கு எந்​த​வித​மான தொடர்​பும் இல்லை. நான் எப்​போதும் அரசியலுக்கு அப்​பாற்​பட்டே இருந்து வரு​கிறேன். எந்​தவொரு அரசி​யல் கட்​சி​யுடனும் எனக்​குத் தொடர்பு இருந்​ததில்லை. அரசியல்​வாதி​களு​டன் தனிப்​பட்ட நட்​புறவும் கிடை​யாது. உண்​மை​களைச் சரிபார்க்​காமல், சம்​பந்​தப்​பட்ட நபரிடம் விளக்கம் கேட்​காமல், ஆதா​ரங்​களை முன்​வைக்​காமல் இத்​தகைய கடுமையான குற்​றச்​சாட்​டுகளை எவ்​வாறு வெளி​யிட​வும், பரப்​பவும் முடி​கிறது, இதில் என்ன நியாயம் இருக்​கிறது, பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்து, யாருடைய ஆதரவுமின்றி எனது வாழ்க்​கையையும் தொழிலை​யும் நானே உருவாக்கியுள்ளேன். இதுபோன்ற ஆதா​ரமற்ற தகவல்​கள் எனது நற்​பெயருக்​குக் களங்​கம் ஏற்​படுத்து​கின்​றன. ஒரு பெண்​ணின் மீது உண்​மை​களை ஆராயாமல் எளி​தில் குற்​றம் சுமத்​தும் சமூகச்சூழல் வேதனையளிக்​கிறது.

எனவே, என்​னைப் பற்​றிய தவறான தகவல்​களை வெளியிடுவதையும் பகிர்​வதையும் ஊடகங்​களும் பொதுமக்களும் தவிர்க்க வேண்​டும். இந்த விவகாரத்​துடன் எனது பெயரைத் தவறாகத் தொடர்​புபடுத்​தும் பதிவு​களை நீக்க வேண்டும். ஒரு குற்​றச்​சாட்டு என்​பது நிரூபிக்​கப்​பட்ட உண்மையாகாது. உண்​மை​களை​யும் ஆதா​ரங்​களை​யும் உறுதிப்படுத்​திய பின்​னரே செய்​தி​கள் வெளி​யிடப்​பட வேண்​டும். இவ்​வாறு அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.