Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூர் – மும்பை இடையே இன்று முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

பெங்களூர் – மும்பை இடையே இன்று முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்

பெங்களூர், நவ. 1- பெங்களூர் – மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார். படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன. மும்பை – பெங்களூர் வழித்தடம் என்பது நாட்டின் மிகவும் பிசியான ரூட்களில் ஒன்றாக உள்ளது. வேலை, தொழில், கல்வி, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக இரு நகரங்களுக்கு இடையேயும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையே சுமார் 845 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் இந்த நகரங்களுக்கு இடையே ரயில், பேருந்துகளில் சென்றால் சராசரியாக 20 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதனால், இரு நகரங்களுக்கும் இடையேயும் அதிவேத்தில் செல்லும் திறன் கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயனிகள் எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஸ்லீப்பர் ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்த்தனர். இந்த நிலையில்தான் பயணிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக மும்பை- பெங்களூர் ரூட்டில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். நின்று செல்லும் இடங்கள் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் உள்ளன. பெங்களூரில் இருந்து புறப்பட்டு இந்துப்பூர், தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, கலபுரகி, சோலாப்பூர், புனே, கல்யாண் வழியாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு செல்ல உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு, நாளை காலை 6.15 மணிக்கு அந்த ரயில் மும்பையை சென்றடைய உள்ளது. வரும் 3 ஆம் தேதி முதல் தினமும் பெங்களுர் பையப்பனஹள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11.55 மணியளவில் மும்பையை சென்றடைய உள்ளது.