Home செய்திகள் தேசிய செய்திகள் கோயில்களில் உள்ள தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கும் திட்டமில்லை: மத்திய அரசு

கோயில்களில் உள்ள தங்கத்துக்கு பதில் பத்திரம் வழங்கும் திட்டமில்லை: மத்திய அரசு

புதுடெல்லி, மே 20- ‘‘கோ​யில்​களில் உள்ள தங்​கத்தை பணமாக்​குதல் அல்​லது தங்கப் பத்திரங்கள் வழங்​கும் திட்​டம் எது​வும் இல்​லை. சமூக வலை​தளங்​களில் வரும் செய்​தி​கள் முற்​றி​லும் பொய்’’ என்று மத்​திய அரசு திட்​ட​வட்​ட​மாக மறுத்​துள்​ளது. நாடு முழு​வதும் உள்ள கோயில் அறக்​கட்​டளை​கள் மற்​றும் மற்ற வழி​பாட்டு தலங்​களிடம் உள்ள தங்​கத்​தைப் பெற்​றுக் கொண்​டு, அதற்கு பதில் தங்கப் பத்திரங்கள் வழங்க மத்​திய அரசு திட்டமிட்டுள்​ளது. அதற்கு ஒப்​புதலும் வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கடந்த சில நாட்​களாக சமூக வலை​தளங்​களில் செய்​தி​கள் பரவி வரு​கின்​றன. இதை மத்​திய நிதித் துறை அமைச்​சகம் திட்டவட்டமாக நேற்று மறுத்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய நிதித் துறை அமைச்சக அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: நாடு முழு​வதும் உள்ள கோயில் அறக்​கட்​டளை​கள், மத வழி​பாட்டு தலங்​களின் நிர்​வாகத்​திடம் உள்ள தங்​கத்தை மத்திய அரசு பெற்​றுக் கொண்டு தங்​கப் பத்​திரங்​கள் வழங்க உள்ள​தாக சமூக வலை​தளங்​களில் வெளிவந்​துள்ள தகவல்​கள் முற்​றி​லும் பொய். இது​போன்ற வதந்​தி​களைப் பொது​மக்​கள் நம்ப வேண்​டாம். அதே​போல் இது​போன்ற செய்​தி​களை ஆராய்ந்து பார்க்​காமல் பிறருக்கு அனுப்ப வேண்​டாம். கோயில்​களின் தங்​கத்​தைப் பணமாக்​கும் திட்​டமோ அல்​லது அவற்​றுக்கு பதில் தங்​கப் பத்​திரம் வழங்​கும் திட்​டமோ மத்​திய அரசிடம் இல்​லை. மேலும், கோயில்​களின் கோபுரங்​கள் மீதுள்ள கலசங்​கள், கோயில்​களின் கதவு​கள் மற்​றும் கோயில் கட்டமைப்பு​களில் உள்ள தங்​கத் தகடு​கள், தங்க முலாம் பூசப்பட்ட பகு​தி​கள், இந்​தி​யா​வின் மூலோ​பாய தங்க இருப்​பு’ என்ற நிலைக்கு மாற்​றப்​படும் என்று பரவும் செய்​தி​யும் பொய். அடிப்​படை ஆதா​ரம் இல்​லாத செய்​தி. அவை அனைத்​தும் தவறான செய்​தி​கள். முற்​றி​லும் அடிப்​படை இல்​லாத செய்​தி​களை பொது​மக்​கள் நம்ப வேண்​டாம். அவற்றை பரப்ப வேண்​டாம். மத்திய அரசின் கொள்கை முடிவு​கள் குறித்த ஆதா​ரப்​பூர்வ வெளியீடு​கள் மூலம் தகவல்​களை அறிந்து கொள்ள வேண்​டும் என்று பொது​மக்​களை அறி​வுறுத்​துகிறோம். சமூக வலை​தளங்​களில் பரவும் வதந்​தி​களை நம்ப வேண்​டாம். இது​போல் சமூக வலை​தளங்​களில் செய்​தி​கள் பரப்​புவது குழப்பத்தையே ஏற்​படுத்​தும். மத்​திய அரசின் அதி​காரப்​பூர்வ செய்தி வெளி​யீடு​களை மட்​டுமே மக்​கள் நம்ப வேண்​டும்​. இவ்வாறு அதி​காரிகள்​ தெரி​வித்​தனர்​.