Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்க ஃபால்டா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் விலகல்

மேற்கு வங்க ஃபால்டா தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் விலகல்

கொல்கத்தா, மே 20- மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. சுவேந்து அதிகாரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதனிடையே தேர்தலின்போது ஃபால்டா தொகுதியில் பரவலாக முறைகேடு நடந்ததாகவும் வாக்காளர்கள் அச்சுறுத்தப் பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அந்த தொகுதியில் உள்ள அனைத்து 285 வாக்குச்சாவடிகளிலும் மே.21 (நாளை) அன்று மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வாக்குப் பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் உதவியாளருமான ஜஹாங்கீர் கான், போட்டியில் இருந்து விலகுவதாகவும், இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் நேற்று அறிவித்துள்ளார். இதனிடையே, அங்கு திரிணமூல் காங்கிரஸார் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.