Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரு – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவை

பெங்களூரு – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவை

பெங்களூரு, மே 20- பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வரும் அக்டோபர் முதல் புதிய நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா (Kempegowda) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏராளமான நாடுகளுக்கு நேரடி விமான சேவை உள்ளது. இருப்பினும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு இதுவரை நேரடி விமான சேவை இல்லை. இணைப்பு விமான சேவை தான் இருந்து வருகிறது. பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமானம் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த விமான சேவை வருகிற அக்டோபர் மாதம் முதல் துவங்க இருக்கிறது. இதன்மூலம் பெங்களூரு சுவிட்சர்லாந்து இடையேயான தொழில் வர்த்தகம், தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.