
கொழும்பு, மே 20- ‘’நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அங்கு நான் ஆயுதம் கொண்டு வர முடியாது. ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் சுட்டு இருப்பேன்டா. நல்ல காலம் நீ இந்தியாவில் இருக்கிறாய். யாழ்ப்பாணம் வந்திருந்தால் வெடிவைத்து இருப்பேன். இந்தியாவில் நீ பாதுகாப்பாய் இருந்து கொள்’’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, இலங்கையின் தமிழ் எம்பி அர்ச்சுனா ராமநாதன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுததுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் சுயேச்சை தமிழ் எம்பியாக இருப்பவர் அர்ச்சுனா ராமநாதன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். சமீபத்தில் தமிழகம் வந்திருந்தார்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோரை சந்தித்து பேசினார். பிறகு விசிக தலைவர் திருமாவளவன் உடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தர் நிகழ்ச்சியில் பங்கற்றார். அதேவேளையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இலங்கை தமிழர்களை வைத்து சீமான் அரசியல் செய்வதாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தான் மே 18 இலங்கை தமிழர் படுகொலை நாளில் அர்ச்சுனா ராமநாதன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போத அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது: ‘’எங்களுடைய அண்ணன் சீமான் அன்றைய தினம் அவன் என்னடா என்று கேவலமான வார்த்தைகளில் பேசியிருந்தார். அண்ணன் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். அங்கு நான் ஆயுதம் கொண்டு வர முடியாது. ஆயுதம் கொண்டு வர முடிந்திருந்தால் சுட்டு இருப்பேன்டா. நல்ல காலம் நீ இந்தியாவில் இருக்கிறாய். யாழ்ப்பாணம் வந்திருந்தால் வெடிவைத்து இருப்பேன். இந்தியாவில் நீ பாதுகாப்பாய் இருந்து கொள். திரள்நிதி வரும். சாப்பிடு அப்படியே இரு. எங்களின் இனத்தை விற்காதே. எனக்கு வலிக்கிறது. என்னுடைய தந்தை இறந்திருக்கிறார். தாய் இறந்திருக்கிறார். பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். எங்களின் வலியை விற்காதே. அவ்வளவு தான் கேட்டு கொள்கிறேன். தாராளமாக திரள்நிதி வாங்கி வயிற்றை நிரபம்பி கொள். அதுபற்றி நான் ஒன்றும் கேட்க மாட்டேன்’’ என்று ஆக்ரோஷமாக சீண்டி உள்ளார்.



















