Home தலைப்பு செய்தி சீன மெகா அணை – ’ இந்தியாவுக்கு அச்சுறுத்தலும்

சீன மெகா அணை – ’ இந்தியாவுக்கு அச்சுறுத்தலும்

புதுடெல்லி: ஆகஸ்ட் 28-
பூகம்பமோ, பெருவெள்ளமோ, சுனாமியோ, நிலச்சரிவோ, எரிமலை வெடிப்போ அல்லது இன்னும் பிற இயற்கைச் சீற்றங்களோ, அது கோரத் தாண்டவம் ஆடும்போது மட்டும்தான் இயற்கையை விஞ்சிய சக்தி எதுவும் இல்லை என்பதை காட்டிச் செல்கிறது. ஆனாலும், மனிதர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. பக்கவாட்டுச் சேதாரங்களைக் குறைத்துக் கொண்டு இயற்கையை எப்படிச் சுரண்டிக் கொள்ளலாம், அதை எப்படி அரசியல் ஆதாயமாக்கலாம், அதை எப்படி புவி அரசியலில் ஆதாயமாக்கலாம் என்று மட்டமாக மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.திபெத்தில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரி வெடிப்பால் போடே கோசி ஆறு வழியாக நேபாளத்தில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து, ரசுவா மாவட்டமே சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதுவரை 350-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோன நிலையில், இந்தப் பேரிடர் இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் ஓர் எச்சரிக்கை மணி என்கின்றனர் புவியியல், சூழலியல் நிபுணர்கள். அது பற்றி சற்று சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம்.இமயமலைப் பகுதி மிகவும் பலவீனமானது. அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது என்பது நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகளை ஏற்படுத்தி, பணிப்பாறை வெடிப்பு, பனிப்பாறை சரிவு என்று அடுக்கடுக்கான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் அதிகம். அவ்வாறான இயற்கைப் பேரிடர்கள் நேரும்போது, கீழ்நோக்கி வெள்ளம் பாய்ந்து பேரழிவை மலையின், நதியின் கீழ்ப்பகுதியில் உள்ள இடங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
திபெத் சம்பவத்தில் இருந்து..
அது எப்படி நிகழும் என்பதை திபெத் சம்பவத்தில் இருந்து அறிவோம். திபெத்தில் ஆகஸ்ட் 26 காலை 8.30 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பனிப்பாறை வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பனிப்பாறை வெடிப்புக்கு நிலநடுக்கம் காரணமாக இல்லாமலும் கூட இருக்கலாம். ஆனால், கவனிக்கப்பட வேண்டியது இயற்கையின் மீது மனிதர்கள் அழுத்தத்தை ஏற்படுத்தி இயற்கை பேரிடர் நிகழ செயற்கையாக வழிவகைகளை உருவாக்குவது.