
ராம்கர், நவ. 29- ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் உள்ள ராஞ்சி-பாட்னா தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளானது. 4 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட பக்தர்கள் 13 பேர் உயிரிழந்தனர். ஜங்காரோ கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் 14 பேர், காரில் பிரசித்தி பெற்ற ராஜ்ரப்பா கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காகச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஒருவர் மட்டும் லேசான காயத்துடன் உயிர் பிழைத்துள்ளனர். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலை நேரம் பயணத்தை தவிர்ப்பது நல்லது. டிரைவர் சற்று கண் அசந்தாலும், விபத்து நிகழ வாய்ப்புள்ளது. அதிகாலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.













