Home செய்திகள் தேசிய செய்திகள் டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு

டாக்டர் சீட்டு இருந்தால்தான் இருமல் மருந்துமத்திய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஜூன் 16-
நாடு முழுவதும் இருமல் மருந்து (சிரப்) விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன்படி, இருமல் மருந்து உள்ளிட்ட பல்வேறு சிரப்களை வாங்குவதற்கு இனி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (பிரிஸ்கிரிப்ஷன்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இனி மருந்துக் கடைகளுக்குச் சென்று நேரடியாக இருமல் மருந்துகளை வாங்க முடியாது. பதிவு பெற்ற மருத்துவ நிபுணரின் சீட்டைச் சமர்ப்பித்தால் மட்டுமே மருந்துகள் வழங்கப்படும். டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து அல்லது மருந்துப் பொடிகளை விற்றால் மருந்துக் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இருமல் மருந்துகள் சிலரால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், தரமற்ற சில மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதைத் தடுத்து, பொதுமக்களின் உயிரைக் காக்கவே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டால் மருந்தகங்களில் நேரடியாக இருமல் மருந்து வாங்கும் வழக்கம் முற்றிலும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.