
சென்னை, நவ. 20–-
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.3,760 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் தங்கம் ரூ.92,080க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.470 குறைந்து, ரூ.11,510க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 15 நாட்களில் தங்கம் விலை சுமார் ரூ.15,000 குறைந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.175க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து, ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.













