Home செய்திகள் தேசிய செய்திகள் தங்கம் விலை 2 நாட்களில் ரூ.1,440 உயர்வு

தங்கம் விலை 2 நாட்களில் ரூ.1,440 உயர்வு

சென்னை, நவ. 27-
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.11,600-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனையானது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று சவரனுக்கு மேலும் ரூ.480 அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.1,440 உயர்ந்துள்ளது.
இதேபோல், 24 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 24 காரட் தங்கம் ரூ.12,654-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,232-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையிலேயே நீடிக்கும் நிலையில், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000-க்கு வந்தது. அதன்பிறகு தொடர்ந்து மூன்றாவது நாளாக அதே விலையில் நீடிக்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. வரும் நாட்களிலும் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப விலைகளில் ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என்பதால், நகை வாங்கத் திட்டமிடுவோரும் முதலீட்டாளர்களும் சந்தைப் போக்கைக் கவனித்து செயல்பட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.