Home தலைப்பு செய்தி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவு

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவு

புதுடெல்லி நவம்பர் 27-
தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மது உள்ள தீபத்தூணில் நாளை 28ஆம் தேதி தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய அரசின் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும் இந்த வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. கார்த்திகை தீப நாளில் மலை மீது உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபம் எடுத்து வந்து தீபத்தூணில் ஏற்றப்பட வேண்டும் மேலும் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மலை மீது உள்ள தர்காவிற்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் தர்காவிற்கு செல்பவர்களை யாரும் தடுக்கக்கூடாது என்று கூறிய நீதிபதிகள் அதேபோல் திருப்பரங்குன்றம் அறங்காவலர்கள் குழுவை கலைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தனர். திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
முன்னதாக கார்த்திகை தீபத் தருநாளில்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது ஆனால் தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்து பல்வேறு காரணங்களுக்காக தீபத்தூரில் தீபம் ஏற்ற வில்லை இதை தொடர்ந்து தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மேற்கண்ட உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர் மேலும் சட்டத்தின் ஆட்சி நடப்பதை யாரும் குறைக்க முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது இது தொடர்பாக இன்று சில உத்தரவுகளை பிறப்பிக்கிறோம் என்று நீதிபதிகள் கோபமுடன் கூறினர் மேலும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் வைத்தியநாதன் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் கோவில் நிர்வாக குழு அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் இப்போது மீண்டும் பற்றி எறிய ஆரம்பித்து உள்ளது இது தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசு என்ன செய்யும் என்று பெரும் பரபரப்பு நிலவுகிறது