
திருப்பதி, அக். 3-
ஆந்திரப் பிரதேசம் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மருந்து தயாரிப்பு ஆலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தமிழகத்தின் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவரும் உயிரிழந்தவர்களில் அடங்குகிறார். மேலும், 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.













