Home மாவட்டங்கள் சென்னை திருப்பரங்குன்றம் – தமிழக அரசு திட்டவட்டம்

திருப்பரங்குன்றம் – தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: நவ. 14-
திருப்​பரங்​குன்​றம் கோயில் மற்​றும் மலையை தொல்​லியல் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர வேண்​டும் என்ற கோரிக்​கையை நிராகரிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளது.
திருப்​பரங்​குன்​றம் முருகன் கோயிலுக்​குச் சொந்​த​மான மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் ஒவ்​வொரு ஆண்​டும் கார்த்​திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி அளித்​துச் சென்னை உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்​தர​விட்​டிருந்​தார். மேலும் தொல்​லியல்​துறை​யினர் அனுமதி​யோடு கோயில் நிர்​வாகம் தரப்​பினர் தீபம் ஏற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டிருந்​தார். தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை சென்னை உயர் நீதி​மன்ற மதுரைக் கிளை அமர்​வும் உறுதி செய்​தது.
இந்த உத்​தரவுக்கு எதிராக கோயில் நிர்​வாகம், தமிழக அரசு, தர்கா நிர்​வாகம் தரப்​பிலும், அதேபோல தீபம் ஏற்ற பொது​மக்​களை அனுமதிக்க மறுத்​ததை எதிர்த்து ராம ரவிக்​குமார் என்​பவரும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்த நிலை​யில், அந்த மனுக்​களின் மீதான விசா​ரணை நிலுவை​யில் இருந்து வரு​கின்​றது.அதேவேளை​யில், இந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு சார்​பில் அதன் நிர்​வாகி கே.கே.ரமேஷ் என்​பவர் தாக்​கல் செய்த ரிட் மனுவில், திருப்​பரங்​குன்​றம் கோயில் மற்​றும் அதன் சுற்​றியுள்ள மலைப்​பகுதியை தொல்​லியல் துறை கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர வேண்​டும், 24 மணி நேர​மும் கோயி​லில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்​றப்​பட வேண்​டும் மற்​றும் கார்த்​திகை திருநாளின்​போது மலையைச் சுற்றி முழு​வதும் தீபம் ஏற்ற வேண்​டும் என கோரி​யிருந்​தார், அந்த மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் தமிழக அரசு பதிலளிக்க நோட்​டீஸ் பிறப்​பித்​திருந்​தது.