Home மாவட்டங்கள் பெங்களூர் பொய் செய்தி பரப்பிய நபர் கைது

பொய் செய்தி பரப்பிய நபர் கைது

மண்டியா, நவ. 14-
நந்தினி தயிர் பாக்கெட்டில் ஜியோ சிம் கார்டு இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
மண்டியா மாவட்டம் மத்தூரை அடுத்த சென்னசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். மந்தூருவில் உள்ள நந்தினி பார்லரில் அவர் தயிர் பாக்கெட் வாங்கியதாகவும்,
பின்னர் வீட்டில் பாத்திரத்தில் ஊற்றித் தாளிக்கும் போது தனது மனைவியின் ஜியோ சிம் கார்டு தற்செயலாகத் தயிரில் விழுந்ததாகவும் காவல்துறையினரிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், தயிர் பாக்கெட்டிற்குள்ளேயே சிம் கார்டு இருந்ததாகத் தவறாக நினைத்து அவர் சமூக வலைதளங்களில் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
நந்தினி தயாரிப்புகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளதாக மன்முல் தலைவர் ஹரீஷ் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மத்தூர் காவல் நிலையக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.