Home செய்திகள் உலக செய்திகள் தேர்தல் தோல்விக்கு ஈரான்போர்காரணம்: டிரம்ப்

தேர்தல் தோல்விக்கு ஈரான்போர்காரணம்: டிரம்ப்

வாஷிங்டன்: நவ. 5-
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்ததற்கு ஈரானுடனான போரும் ஒரு காரணமாக அமைந்தது என்ற துணை ஜனாதிபதி வான்ஸின் கருத்தை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், போரில் ஈடுபடுவதே எனது முடிவாக இருக்கும்.
இதுதான் எனது தீர்வு. ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது.நான் தேர்தலில் போட்டியிட்டிருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். எனது பிரசாரக் கூட்டங்களில் ஏராளமான மக்கள் திரண்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஆதரவையும் அன்பையும் எங்களது கட்சி வேட்பாளர்களுக்கு அதே அளவில் கொண்டு சேர்க்க முடியவில்லை. பிரசாரக் கூட்டங்களில் மக்கள் வெளிப்படுத்திய அன்பு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது” என்றார்.