
அமராவதி: நவ. 5-
அர்னாப், முரசு ஆகிய புயல்களால் ஆந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
அப்போது விவசாய இழப்பு, உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்து இருவரும் சுமார் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினர். கடலோர ஆந்திரம் மற்றும் ராயலசீமா பகுதிகளில் புயலால் பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு பிரதமரிடம் தெரிவித்தார்.
எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதிகாரிகள் செயல்பட்டதால் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு போதிய நிவாரண உதவிகளை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, புயல் பாதிப்பை ஆந்திர அரசு அனுபவத்தின் அடிப்படையில் சரியாக எதிர்கொண்டதாகப் பாராட்டினார். “அனுபவத்தால் புயலை சரியாக எதிர்கொண்டீர்கள். மின் நிறுத்தம் செய்து கால்நடைகளின் உயிர்களைக் காப்பாற்றியதுடன், சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்துள்ளீர்கள்” என்று அவர் தெரிவித்தார்.புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகள், விவசாய இழப்புகள், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்பாக பிரதமர் கேட்டறிந்ததாகவும், நிவாரண உதவி வழங்குவது குறித்து முதல்வர் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
















