
பெங்களூரு: ஆக. 8-
பெங்களூரு ‘நம்ம மெட்ரோ’ ஊதா நிற பாதையில் உள்ள சுவாமி விவேகானந்தா ரோடு மற்றும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 9, ஞாயிற்றுக்கிழமை) காலை பைப்பனஹள்ளி மற்றும் எம்.ஜி.ரோடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளது.
நாளை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை பைப்பனஹள்ளி – எம்.ஜி.ரோடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட மாட்டாது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன், காலை 9.00 மணிக்கு மேல் வழக்கம்போல் ரயில்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை பாதிப்பு பைப்பனஹள்ளி – எம்.ஜி.ரோடு இடையே மட்டுமே இருக்கும். மற்ற பாதைகளில் வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்:
செல்லகட்டா முதல் எம்.ஜி.ரோடு வரை
பைப்பனஹள்ளி முதல் வைட்ஃபீல்டு (காடுகோடி) வரை
மாதவரா முதல் சில்க் இன்ஸ்டிடியூட் வரை (பச்சை நிற பாதை)
ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை (மஞ்சள் நிற பாதை)
நாளை காலை பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள் இந்த சேவை மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.













