Home செய்திகள் உலக செய்திகள் நிலமிழந்த காசா விவசாயிகள்

நிலமிழந்த காசா விவசாயிகள்

காசா, மே 27- பாலஸ்தீனத்தின் காசா நகரில் நிலவி வரும் கடும் போர் காரணமாக சுமார் 86 சதவீத விவசாய நிலங்கள் முற்றிலும் அழிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசிக்கும் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க மாற்று வழியை கையாண்டு வருகின்றனர். உதவி பொருட்களாக தங்களுக்கு வந்த உணவோடு வந்த டின்களை பயன்படுத்தி, புதினா மற்றும் பல காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். இஸ்ரேலிய படையினரின் துப்பாக்கி சூடு அச்சுறுத்தலுக்கு மத்தியில், தங்களின் விவசாய நிலங்களை முற்றிலும் இழந்த பெரும்பாலான காசா விவசாயிகள், தங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்காக இந்த டின் விவசாய முறையை தீவிரமாக மேற்கொண்டு, வெற்று உணவு டின்களில் காய்கறிகளை வளர்த்து வருகின்றனர். தங்களின் பெரும்பாலான விவசாய நிலங்களை இழந்ததாலும், விவசாயப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாலும் தெற்கு காசாவில் உள்ள விவசாயிகள் காலி உணவுக் கேன்களை, பாரம்பரிய நடவுக் கலன்களுக்கு ஒரு புதுமையான மாற்றாக பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கூறி இருக்கும் காசா நகர விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நிவாரண உதவிகள் மூலம் வரும் உணவுப் பொருட்களின் காலியான டப்பாக்கள் தங்களுக்கு அதிகளவில் தற்போது கிடைத்து வருகிறது. எனவே வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தாங்கள் தங்கியிருக்கும் தற்காலிக முகாம்களுக்குள் அல்லது சிறிய இடங்களில் செடிகளை வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.