
புதுடில்லி, ஆக. 27–- ஆன்மிக சுற்றுலா சென்ற இந்தியர்கள் நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிக்கு தன்னை அனுமதிக்குமாறு ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு நேபாள அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில்; கியிரோங்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேரை இழந்த வேதனையில் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளோம். வெள்ளத்திற்குப் பிறகு அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் என்னையும், சில தன்னார்வலர்களையும் கியிரோங்கிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும். மீட்புப் பணிகளுக்கு எந்தவிதத்திலும் இடையூறாக இருக்க மாட்டோம். குடும்பத்தினருக்கு உதவவும், அடையாளங்களைக் கண்டறிய உதவவுமே அங்கு செல்ல விரும்புகிறோம். நாங்கள் இப்போது, திபெத் எல்லையில் உள்ள சாகா நகரில் உள்ளோம். எங்களை கியிரோங் செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.














