Home விளையாட்டு மகளிர் டி20-ல் டிஎன்சிஏ லெவன் வெற்றி

மகளிர் டி20-ல் டிஎன்சிஏ லெவன் வெற்றி

சென்னை, ஆக. 27–- மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு டி 20 காட்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் டிஎன்சிஏ தலைவர் லெவன் – டிஎன்சிஏ செயலாளர் லெவன் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிஎன்சிஏ செயலாளர் லெவன் 20 ஓவா்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதி 39 பந்துகளில் 34 ரன்களை எடுத்தார். டிஎன்சிஏ தலைவர் லெவன் தரப்பில் பூஜாரிணி, ரோஷினி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய டிஎன்சிஏ தலைவர் லெவன் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் அா்ஷி சவுத்ரி 37, திரிஷா மது 27 ரன்கள் விளாசினர்.