
காட்மாண்டு: செப். 3:
நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷிர் கனால் தெரிவித்துள்ளார், “ரசுவா பேரழிவை மனிதாபிமான அவசரநிலையாக மட்டுமே கருதக் கூடாது. இது முக்கிய தொழில்மயமான பொருளாதார நாடுகளால் வெளியிடப்படும் கரியமில வாயுவால் நிகழ்ந்த பேரழிவாகும்.
இது நிதியுதவி சார்ந்த விஷயமல்ல. இது சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்புடன் தொடர்புடையது. தற்போதைய உலகில் அதிக அளவில் கரியமில வாயுவை உமிழும் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் நேபாளத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பு உள்ளதாக அவர் கூறினார்.”நேபாள அரசு, ஐ.நா. ஆதரவு பெற்ற ‘இழப்பு மற்றும் சேதங்களுக்கு பதிலளிப்பதற்கான நிதியை’ முறைப்படி அணுகியுள்ளதாகவும், இதனை சர்வதேச மன்றங்களில் எடுத்துரைக்க அரசு தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கும் 81-வது ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா கலந்து கொண்டு, இக்கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.














