Home மாவட்டங்கள் சென்னை பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கசிவு; கோவையில் கடற்படை வீரர் கைது

பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கசிவு; கோவையில் கடற்படை வீரர் கைது

கோவை, அக். 4- பாகிஸ்தான் உளவு அமைப்பின் ‘ஹனிடிராப்’ வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை கசிய விட்ட கடற்படை வீரர் பிரதீப் முகர்ஜி, 31, கோவையில் கைது செய்யப்பட்டார். ஹனி டிராப் என்பது ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, அவரிடம் உள்ள பணம், நகைகள் அல்லது முக்கிய ரகசியங்களை மிரட்டிப் பறிக்கும் ஒரு மோசடி முறையாகும். அந்த வகையில், பாகிஸ்தான் உளவு அமைப்பின் பெண் ஏஜென்ட் என கூறப்படும் பெண்ணின் ‘ஹனிடிராப்’ வலையில் கடற்படை வீரர் பிரதீப் முகர்ஜி (31) சிக்கி இருக்கிறார்.
அவர் கோவையில் கைது செய்யப்பட்டார். விசாகப்பட்டினம் கடற்படை தளம், கப்பல்களின் இயக்கம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புத் தகவல்களை கசியவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.