Home மாவட்டங்கள் சென்னை திமுகவை நிலைகுலைய வைக்க தவெக வியூகம்

திமுகவை நிலைகுலைய வைக்க தவெக வியூகம்

நாகப்பட்டினம்: அக். 28-
இன்​னும் 6 மாதங்​களுக்​குள் இந்த அரசு கலைந்​து​விடும் என்று திமுக தலை​வர் ஸ்டா​லின் கடந்த 24-ம் தேதி பேசிய நிலை​யில், முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸை கைது செய்து திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்​திருக்​கிறது தவெக அரசு.
இதற்கு முன்​பும் திமுக தலை​வர் இப்​படி கூறியபோது​தான் அடுத்த 2 நாளில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கைது செய்​யப்​பட்​டார். ஆட்சி கலை​யும் என்று எப்​போது ஸ்டா​லின் பேசுகிறாரோ, அப்​போதெல்​லாம் பதிலடி​யாக கைது அதிர்ச்சி கொடுக்க தயாராக இருக்​கிறது தவெக அரசு.திமுக – தவெக இடையேதான் போட்டி என்று முதல்​வர் விஜய் தொடர்ந்து சொல்​லிவரும் நிலை​யில், களமும் அதைத்​தான் உணர்த்து​கிறது. நடந்து முடிந்த தாராபுரம், மதுராந்​தகம் தொகுதி இடைத்​தேர்​தலில் முதல்​வர் விஜய் தீவிர​மாக சுற்றி வந்​தா​லும்​கூட எதிர்​பார்த்த வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அவர்​களால் வெற்றி பெற முடிய​வில்லை. திமுக பலத்த போட்​டியை கொடுத்து இரண்​டாம் இடத்​தைப் பெற்​றது.
தீபாவளிக்​குப் பிறகு மீதமுள்ள 5 தொகுதி​களுக்​கான இடைத்​தேர்​தல் அறிவிக்கப்படலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த நிலை​யில்​தான் தங்​களுக்கு போட்​டி​யாக இருக்​கும் திமுகவை நிலைகுலைய வைக்க ஊழல் வழக்​கில் சிலரை கைது செய்து, மக்​கள் மத்​தி​யில் அவர்​களை அம்​பலப்​படுத்த வேண்டும் என்று தவெக கருதுகிறது.அத்​துடன், அன்​பில் மகேஸ் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடுவார் என்று சொல்​லப்​படும் நிலை​யில், அவரை ஊழல் புகாரில் கைது செய்​வது, 5 தொகுதி இடைத்​தேர்​தலில் தங்​களுக்கு சாதக​மான விஷய​மாக மாறும் என்​பது தவெக​வின் கணக்கு. அது​மட்​டுமில்​லாமல் ஒவ்​வொரு மாவட்​டத்​திலும் உள்ள திமுக முக்​கிய தளகர்த்​தர்​களை கைது செய்து அடக்​கு​வது அல்​லது ஆசை காட்​டியோ, மிரட்​டியோ தங்​கள் கட்​சிக்​குள் இழுப்​பது என்​பது தவெக​வின் தற்​போதைய தாரக மந்​திர​மாக உள்​ளது என்​கிறார்​கள்.
ஆனால், தவெக​வினரோ, “இது அரசி​யல் காழ்ப்​புணர்ச்​சி​யால் நடப்​பது அல்ல. ஊழல்​வாதி​கள் மீதான நட​வடிக்கை.3 பைல்​கள் என் மேஜையில் உள்​ளன. அவற்றை திறக்க வைத்து விடாதீர்​கள் என்று சொன்ன முதல்​வர் விஜய், அதற்கு திமுக விடுத்த சவாலை ஏற்று முதல் பைலை திறந்​துள்​ளார். இன்​னும் 2 பைல்​கள் அவரிடம் உள்​ளன. அதையும் வெகு விரைவில் திறப்​பார். ஊழல் செய்​தவர்​கள் மீது கட்​டாயம் நட​வடிக்கை பாயும்” என்​கின்​றனர் உறுதி​யுடன்.