Home விளையாட்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் மாற்றங்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் மாற்றங்கள்

இஸ்லாமாபாத், செப். 5- இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வியால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்த பின்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக 7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களை நீக்கியது. இதனால் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா ஆகியோர் திடீரென நாட்டிற்கு திரும்ப உத்தரவிடப்பட்டனர். இதற்கு அவர்களின் மோசமான பார்ம் காரணமாகவும், ஒழுங்கீனமான நடத்தையும் காரணமாகவும் கூறப்படுகிறது. முகமது ரிஸ்வான் கடந்த 4 இன்னிங்ஸ்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தார். இமாம் உல் ஹக் லார்ட்ஸ் டெஸ்டில் தசைப்பிடிப்பு காரணமாக விளையாடாமல் தவிர்த்தார், இதனால் அவரது அர்ப்பணிப்பு கேள்விக்குறியாகியது. மேலும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் ஏற்பட்ட அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க மூவரும் உத்தரவிடப்பட்டுள்ளனர். அவர்களின் தவறுகள் குறித்து உறுதியாக தகவல் கிடைக்காத நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் ரிஸ்வான் மற்றும் இமாமுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்தன.இந்நிலையில், பயிற்சியாளர் சர்பராஸ் நீக்கப்பட்டு, மைக் ஹெசன் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியை அவர் மேற்பார்வை செய்வார். தேர்வுக் குழு உறுப்பினர் மிஸ்பா உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்வுக் குழு தலைவர் ஆகிப் ஜாவேத்தின் பதவி பறிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் குழப்பம் அதிகரித்துள்ளது.