
நியூயார்க், செப். 26- 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) உயர்நிலை வார நிகழ்வில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் நிருபரின் கேள்விக்கு கடுமையாகப் பதிலளித்தார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் முடிவில் குறுக்கிட்ட பாகிஸ்தான் நிருபர், “பாகிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை உங்கள் அரசு எப்போது நிறுத்தும்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெய்சங்கர், “ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது” என்று பதிலளித்தார். இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு, அமைச்சரின் கருத்துகள் மட்டுமே இடம்பெறும் செய்தியாளர் சந்திப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முடிவில் பாகிஸ்தான் நிருபர் திடீரென குறுக்கிட்டு, பயங்கரவாதம் தொடர்பாக அர்த்தமற்றதாகக் கூறப்பட்ட கேள்வியை எழுப்பியதாக செய்தி நிறுவனம் ஏஎன்ஐ தெரிவித்தது.













