
பெங்களூர், செப். 20- பெங்களூரு கோரமங்களா போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டல் பகுதியில் சொகுசு ஆடி கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை ஹோட்டலை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது, அங்கு நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரின் (எண்: KA 51 MG 9786) உள்ளே ஒருவர் படுத்துக் கிடப்பதைப் பார்த்தனர். சந்தேகமடைந்த ஊழியர்கள் அவரை தட்டி எழுப்ப முயன்றனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. போலீசார் விசாரணை இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக கோரமங்களா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் காரைத் திறந்து பரிசோதித்தபோது, காரில் இருந்த நபர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் அக்பர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள்மற்றும் கோரமங்களா போலீசார் வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















