Home தலைப்பு செய்தி பெங்களூரில் சி.ஜே.பி போராட்டம்

பெங்களூரில் சி.ஜே.பி போராட்டம்

பெங்களூர்: அக். 8-
காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) அதாவது கரப்பான் பூச்சி கட்சி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது டெல்லியைத் தொடர்ந்து, மத்திய தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி பெங்களூரில் இன்று அக்கட்சியினர் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தினர்.
​பெங்களூரு ஃப்ரீடம் பார்க் (சுதந்திர பூங்கா) வளாகத்தில் ‘ஜனதா நியாயாலயா’ (மக்கள் நீதிமன்றம்) என்ற பெயரில் சிஜேபி தலைமை ஏற்று இந்த பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தியுள்ளது.
​நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர் முறையை ரத்து செய்ய வேண்டும். எஸ்.ஐ.ஆர் முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிஜேபி சார்பில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
​இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்திய சிஜேபி, தற்போது பெங்களூரில் போராட்டம் நடத்தியதன் மூலம் நாடு முழுவதும் தலைமை தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
​சிஜேபி நடத்திய இந்தப் போராட்டத்தில் கட்சியின் நிறுவனர்களான அபிஜித் தீப்கே, சௌரவ் தாஸ், அசந்தோஷ் ராங்கா மற்றும் பிரபல யூடியூபர் துருவ் ரடீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
​‘ஜனதா நியாயாலயா’ பேனரின் கீழ் நடந்த இந்தப் போராட்டத்தில் சிஜேபி தலைவர்களுடன் பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தேவநூரு மகாதேவா, பிரபல பொருளாதார நிபுணர் பரகாலா பிரபாகர் மற்றும் சில ஓய்வுபெற்ற நீதிபதிகளும் பங்கேற்றனர்.
​போராட்டத்தின் போது எஸ்.ஐ.ஆர் முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டு அறியும் மேடையும் அமைக்கப்பட்டு, அவர்களின் புகார்களைக் கேட்டுத் தீர்ப்பு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
​பலத்த போலீஸ் பாதுகாப்பு:
சிஜேபி கட்சியின் போராட்டம் காரணமாக ஃப்ரீடம் பார்க் சுற்றிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
​ஃப்ரீடம் பார்க்கில் சிஜேபி நடத்திய இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டதால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
​பதவி விலகக் கோரிக்கை:
சிஜேபி கட்சியின் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தலைவர்கள், “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் மற்றும் எஸ்.ஐ.ஆர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறினர்.
​”ஏற்கனவே டெல்லியில் போராட்டம் நடத்தி முடித்துவிட்டோம். இன்று பெங்களூரில் போராட்டம் நடந்துள்ளது. அடுத்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் சிஜேபி போராட்டங்களை நடத்தும். தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் ஓயாது” என்றும் அவர்கள் செய்தனர்.