Home செய்திகள் உலக செய்திகள் இளம்பெண்கள் மீது ஊசி தாக்குதல்.. பலாத்காரம்! 243 பேர் கைது

இளம்பெண்கள் மீது ஊசி தாக்குதல்.. பலாத்காரம்! 243 பேர் கைது

பாரீஸ், ஜூன் 24- பிரான்ஸ் நாட்டில் இசை நிகழ்ச்சியில் மிகப் பெரிய வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு இளம் பெண்கள் மீது ஊசி மூலம் மர்ம பொருள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், அதன் பிறகு பெண் ஒருவர் பலாத்காரமும் செய்யப்பட்டுள்ளார். பெண்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற இசைத் திருவிழாவான ‘ஃபெட் டி லா மியூசிக்’ (Fete de la Musique) இந்த ஆண்டு பெரும் வன்முறையாகவும் குழப்பமாகவும் மாறியுள்ளது. உலகளாவிய அளவில் புகழ் பெற்ற இந்த இசைத் திருவிழாவில், லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளும் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர். என்ன நடந்தது அவர்களில் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் புகார்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விழாவின் போது இரு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், கூட்ட நெரிசலில் பல பெண்கள் மீது ஊசிகள் குத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஊசி தாக்குதல் இந்த விழாவில் நடந்த சம்பவங்களிலேயே மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பெண்களுக்கு நேர்ந்த ஊசித் தாக்குதல்கள் தான். கூட்ட நெரிசலில் பெண்கள் சிலர் தங்களின் உடலில் ஏதோ ஊசி குத்துவது போன்ற திடீர் வலியை உணர்ந்துள்ளனர். இப்படி ஊசி குத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிலர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, ‘பவுலவர்டு டி லா மேடலெய்ன்’ என்ற பகுதியில் இதுபோல ஊசிக் குத்தப்பட்ட பெண் ஒருவர் மயக்கமடைந்ததை அடுத்து, அவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஊசிகள் வழியே ஏதேனும் விஷம் செலுத்தப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இசைத் திருவிழாவின் போது பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகக் காவல் துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரீஸ் நகரின் மத்தியப் பகுதிகளான ‘சாட்லெட்’ உள்ளிட்ட பல இடங்களில் மோதல்களும், கத்திக்குத்துச் சம்பவங்களும் அரங்கேறின.