Home செய்திகள் தேசிய செய்திகள் மது விருந்து – 5 பேர் கைது

மது விருந்து – 5 பேர் கைது

புதுடெல்லி, ஜூன் 24- வாரணாசியில் கங்கை ஆற்றில் பாஜக கவுன்சிலரின் படகில் கோழிக்கறி சமைத்து மது விருந்து நடத்தப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, சம்மந்தப்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் புனித நகரமான வாரணாசியில் ஓடும் கங்கை நதி இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கடந்த மார்ச் 16-ம் தேதி 18 முஸ்லிம் இளைஞர்கள் படகில் சென்று ரம்ஜான் நோன்பு இப்தார் நடத்தினர். அப்போது, படகில் அசைவ பிரியாணியை எடுத்துச் சென்று உண்ணும் வீடியோ வைரலாகியது. இதையடுத்து வாரணாசி பாஜக இளைஞர் பிரிவு தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் அளித்த புகாரின் பேரில் 18 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.