Home செய்திகள் தேசிய செய்திகள் மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்களை பாதுகாக்க உத்தரவு

மாணவர் போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுத விவரங்களை பாதுகாக்க உத்தரவு

புதுடெல்லி, ஜூலை 31- டெல்லி மாணவர் போராட்​டத்​தில் பயன்​படுத்​திய ஆயுதங்​களின் விவரங்​களை பாது​காக்​க​வும், அது குறித்து அறிக்கையை தாக்​கல் செய்​ய​வும் மத்​திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது. நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து டெல்லி ஜந்​தர் மந்​தரில் மாணவ, மாண​வியர், இளைஞர்​கள் தொடர் போராட்​டம் நடத்தினர். கடந்த 20-ம் தேதி நடத்திய பேரணியின்போது போலீஸார் தடியடி நடத்​தினர். மாணவர்​கள் போராட்​டத்​தில் பெல்லட் குண்​டு​கள் பயன்படுத்​தப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்தது.இந்த சூழலில் போராட்​டத்தை கட்​டுப்​படுத்த பெல்​லட் குண்​டு​கள் பயன்​படுத்​து​வதை தடுக்க கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்​கு​கள் தொடுக்​கப்​பட்டு உள்​ளன. உச்ச நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய் மாலியா பக் ஷி, வி.மோகனா அமர்​வில் பொதுநல வழக்​கு​கள் விசாரணைக்கு வந்​தன. அப்​போது மூத்த வழக்​கறிஞர் விருந்தா குரோவர் கூறிய​தாவது: டெல்லி போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​களுக்கு எதி​ராக காவல்துறை​யினர் பெல்​லட் குண்​டு​களை பயன்​படுத்தி உள்ளனர். போராட்​டத்​தில் களமிறக்​கப்​பட்ட அதிரடி படையினரின் பணி விவரம், வழங்​கப்​பட்ட ஆயுதங்​கள், வெடிபொருட்​கள், அதிரடிப் படை​யினரை களமிறக்க பிறப்பிக்கப்பட்ட உத்​தர​வு, பெல்​லட் குண்டு​களின் விவரம் உள்ளிட்​ட​வற்​றை​யும், சிசிடிவி பதிவுகளையும் பாது​காக்க உத்தரவிட வேண்​டும். இவ்​வாறு வழக்கறிஞர் விருந்தா குரோவர் வாதிட்​டார். இதைத் தொடர்ந்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் கூறிய​தாவது: அசாதாரண சூழல் நில​வும் பட்​சத்​தில் பெல்​லட் குண்​டு​களை பயன்படுத்த காவல் துறை​யினருக்கு அனு​மதி உள்​ளது. அதிரடிப்படை​யினர் பயன்​படுத்​திய ஆயுதங்​கள் தொடர்​பான பதிவுகளை பாது​காத்து வைக்க வேண்​டும். இவ்​​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.