Home மாவட்டங்கள் பெங்களூர் மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு

மீனாட்சி கோயில் நிலம் அபகரிப்பு

மதுரை: ஜூலை 29-
மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குச் சொந்​த​மான ரூ.60 கோடி மதிப்​புள்ள நிலம் மோசடி​யாக விற்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக முன்​னாள் சார் பதி​வாளர்​கள், வட்​டாட்​சி​யர், விஏஓ உட்பட 19 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
மதுரை மீனாட்சி அம்​மன் கோயிலுக்​குப் பாண்​டிய மன்​னர்​கள், விஜய நகரப் பேரரசர்​கள், கர்​நாடக மன்​னர்​கள் உட்பட பலர் ஏராள​மான நிலங்​களை நன்​கொடை​யாக வழங்கி உள்​ளனர். அதற்​காகப் பல்​வேறு கட்​டளை​களை​யும் ஏற்​படுத்தி உள்​ளனர். அந்​தக் கட்​டளை​களில் ஒன்​று​தான். புதுக்​கோட்டை ராஜகு​மாரர் தட்​சிணா​மூர்த்தி துரை ராஜா, துரை ராணி அறக்​கட்​டளை. இந்த அறக்​கட்​டளை சார்​பில் கடந்த 1930 ஜூன் 6-ம் தேதி சென்னை சைதாப்​பேட்டை சார் பதி​வாளர் அலு​வல​கத்​தில் உயில் ஒன்று பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
அதில், மதுரை மீனாட்சி அம்​மன் கோயில், அழகர் கோவிலுக்​குத் தர்ம காரி​யங்​கள் செய்ய மதுரை அழகர் கோவில் ரோடு, பிபீகுளம் ஹக்​கிம் அஜ்மல் கான் சாலை​யில் உள்ள 1.79 ஏக்​கர் (0.72640 சதுர மீட்​டர்) ‘அசோக விலாஸ்’ பங்​களா மற்​றும் தோட்​டம் ஆகிய சொத்​துகள் எழுதி வைக்​கப்​பட்​டுள்​ளன. இந்​தச் சொத்​துகள் மூலம் கிடைக்​கும் வரு​வா​யில், கோயில் டிரஸ்​டிகள், மீனாட்சி அம்​மன் கோயில், கள்​ளழகர் கோயில், முக்குறுணி விநாயகர் கோயிலில் சிறப்பு அர்ச்​சனை, நெய்​வே​தி​யம், பக்​தர்​களுக்​குப் பிர​சாதம் வழங்க வேண்​டும். அழகர் கோவில் கருப்​பண​சாமிக்​குச் சந்​தனக் கும்பா எடுக்க
வேண்​டும்.
இந்​துக் கல்​லூரி​யில் இன்​டர்​மீடியட் வகுப்​பில் சேரும் 2 ஏழை மாணவர்​களுக்கு கல்விக் கட்​ட​ணம், ஆண்​டு​தோறும் 100 ஏழைகளுக்கு அன்​ன​தானம் வழங்க வேண்​டும். இதற்​காக அசோக விலாஸ் பங்​களா, தோட்​டத்தை வாடகைக்கு மட்​டுமே விட​வேண்​டும். கிர​யம், அடமானம், ஒத்தி போன்ற எந்த செயலும் செய்ய கூடாது என்று அந்த உயி​லில் நிபந்​தனை​கள் குறிப்​பிடப்​பட்​டுள்​ளன.இந்​நிலை​யில், 2016 ஜூன் 24-ம் தேதி கோயில் பெயரில் இருந்த அந்த சொத்​தை வெள்​ளைச்​சாமி பல்​ல​வ​ராயர் மனைவி ராமாயி ஆயி​யார் உட்பட 9 பேரின் பெயருக்கு மதுரை வடக்கு வட்​டாட்​சி​யர் பட்டா மாறு​தல் செய்து கொடுத்​துள்​ளார். புகாரின் அடிப்படையில், வட்​டாட்​சி​யர் மீது துறைரீ​தி​யாக நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.சம்​பந்​தப்​பட்ட விஏஓ பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். கோட்​டாட்​சி​யர் விசா​ரணை அடிப்​படை​யில் வட்​டாட்​சி​யரின் உத்​தரவு ரத்து செய்​யப்​பட்டு மீண்​டும் கோயில் பெயருக்கு பட்டா மாற்​றம் செய்​யப்​பட்​டது.