Home செய்திகள் தேசிய செய்திகள் முதல்வராக பதவியேற்ற விஜய்யின் பூர்வீக கிராமத்தில் மக்கள் கொண்டாட்டம்

முதல்வராக பதவியேற்ற விஜய்யின் பூர்வீக கிராமத்தில் மக்கள் கொண்டாட்டம்

ராமேசுவரம்: மே 11-
தமிழக முதல்​வ​ராக ஜோசப் விஜய் பொறுப்​பேற்​றதைத் தொடர்ந்து அவரது ஊரான ராம​நாத​புரம் மாவட்​டம் முத்​துப்​பேட்​டை​யில் ஊர் மக்​கள் பட்​டாசு வெடித்​து, இனிப்​பு​கள் வழங்கி விமரிசை​யாக கொண்​டாடினர்.
சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று காலை நடை​பெற்ற பதவி​யேற்பு விழா​வில் தமிழக முதல்​வ​ராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் பதவி​யேற்​றுக் கொண்​டார்.
இதையடுத்து ராம​நாத​புரம் மாவட்​டம் முழு​வதும் உள்ள விஜய் ரசிகர்​கள் மற்​றும் தவெக தொண்​டர்​கள் உற்​சாக​மாகக் கொண்​டாடினர். முன்​ன​தாக பட்​டாசுகளை வெடித்​தும் பொது​மக்​களுக்கு இனிப்​பு​களை வழங்கியும் தங்​களது மகிழ்ச்​சி​யைப் பகிர்ந்து கொண்​டனர்.இதன்​ ஒருபகு​தி​யாக ஜோசப் விஜ​ய்யின் பூர்​வீக ஊரான ராம​நாத​புரம் மாவட்​டம் முத்​துப்​பேட்​டை​யில் ஊர் பொது​மக்​கள் மற்​றும் தவெக தொண்​டர்​கள் பட்​டாசு வெடித்து மேளம் இசைத்து இனிப்​பு​கள் வழங்கி மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர்.