
சென்னை: செப்டம்பர் 5-
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள். AI தொழில்நுட்பம் நொடிப்பொழுதில் விடைகளை வழங்கும் காலத்தில், எதையும் பகுத்தறிந்து, சரியான கேள்விகளை எழுப்பும் தலைமுறையை உருவாக்குவது இனி ஆசிரியர்களின் பெரும் பணி ஆகும். அறிவால் உயர்ந்து, பகுத்தறிவால் தெளிந்து, மனிதநேயத்தால் ஒன்றுபட்ட சமூகத்தைக் கட்டமைக்க ஆசிரியர் தினத்தில் உறுதிகொள்வோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.












