Home மாவட்டங்கள் சென்னை ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

சென்னை: நவ. 8-
தீபாவளி பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து, அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இந்து மதத்தின் முக்கியப் பண்டிகையான தீபாவளியையொட்டி, மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர். மேலும், வீடுகளில் பட்டாசுகள் வெடித்தும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்களை வீட்டுக்கு வெளியே சந்தித்த ரஜினிகாந்த், தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
ரஜினிகாந்தை சந்தித்த ரசிகர்கள் அவருக்கு பரிசுப்பொருட்களை வழங்கினர். ரசிகர்கள் வழங்கிய அந்தப் பரிசுப்பொருட்களை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். பின்னர், ரசிகர்களுக்கு மீண்டும் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.