Home செய்திகள் தேசிய செய்திகள் வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடும் பிரதமர் மோடி

வீரர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடும் பிரதமர் மோடி

புதுடெல்லி: நவ. 8-
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் சி.ஆர்.பி.எப்., வீரர்களுடன் இன்று தீபாவளி கொண்டாட உள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது பதிவு: தீபாவளி எனும் நன்னாளில் நான் பஸ்தருக்குச் செல்கிறேன். ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் அட்டகாசம் நிலவிய அந்த இடத்தில், இன்று வளர்ச்சியின் அலை வீசுகிறது.
நமது வீரமிக்க படைவீரர்களுக்கு, அவர்களின் தியாகங்கள், தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்விற்கு மரியாதை செலுத்த நான் செல்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி கொண்டாடிய தீபாவளி பண்டிகை:

  • 2014ல் முதல்முறையாக பிரதமராக பொறுப்பேற்ற போது, சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
  • 2015ல் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
  • 2016ல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் சீன எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சும்டோ பகுதியில் கொண்டாடினார்.
  • 2017ல் ஜம்மு காஷ்மீரின் குரேஸ் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்
  • 2018ல் உத்தரகண்டின் உள்ள ஹர்சில் பகுதியில் பண்டிகையைக் கொண்டாடினார்.
    2019ல் ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டு பகுதியில் ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.
  • 2020ல் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள லோங்கேவாலா எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பண்டிகையைக் கொண்டாடினார்.
  • 2021ல் ஜம்மு காஷ்மீரின் நெளஷேரா பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
  • 2022ல் கார்கில் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
  • 2023ல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சா எல்லைப் பகுதியில் பண்டிகையைக் கொண்டாடினார்.
  • 2024ல் குஜராத்தின் கட்ச் பகுதியில் இருக்கும் சர் க்ரீக் எல்லைப் பகுதியில் தீபாவளியைப் பிரதமர் கொண்டாடினார்.
  • 2025ல் கோவா-கார்வார் கடற்பகுதியில் இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இந்தியக் கடற்படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.